மோகன்லாலுடன் 33 வயது வித்தியாசம்: மாளவிகா மோகனன் கடுப்பு

சென்னை: அடுத்தடுத்து சில தோல்வி படங்களை தந்தார் மாளவிகா மோகனன். தற்போது சர்தார் 2 படத்தில் பெரிய நம்பிக்கையுடன் நடித்து வருகிறார். அதை தொடர்ந்து மோகன்லால் நடிக்கும் ‘ஹிருதயபூர்வம்’ மலையாள படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிக்கும் மோகன்லாலுக்கும் மாளவிகா மோகனனுக்கும் இடையே 33 வயது வித்தியாசம் இருப்பதால் இணையத்தில் பல டிரோல்கள் எழுந்தன.

இந்நிலையில், ரசிகர் ஒருவர் இந்த மூத்த நடிகர்கள் தங்கள் வயதிற்கு பொருந்தாத வேடங்களில் நடிக்க ஆசைப்படுவதற்கு என்ன காரணம்? என்று கேள்வி எழுப்ப அதற்கு நெத்தியடி பதிலளித்துள்ளார் மாளவிகா. அதில், ‘‘அப்படி உங்களிடம் யார் கூறியது? எதுவும் தெரியாமல் ஒரு நபரையோ, படத்தையோ மதிப்பிடுவதை நிறுத்துங்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: