சென்னை, ஏப்.10: அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் கெட்ட வார்த்தைகள் இடம்பெற்றதால் சரமாரி காட்சிகளில் கட் கொடுத்துள்ளது சென்சார் போர்டு. ‘குட் பேட் அக்லி’ படம் இன்று வெளியாக இருக்கும் நிலையில், படத்தின் தணிக்கை குழுவின் சான்றிதழ் வெளியாகி உள்ளது. இப்படத்தை 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் பார்க்கும் வகையில் ‘யுஏ 16+’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும், படத்தின் நீளம் 2 மணி நேரம் 20 நிமிடம் என்றும், படத்தில் பல இடத்தில் கெட்ட வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளதால், அவை நீக்கப்பட்டுள்ளது என்றும், சில வார்த்தைகள் ‘மியூட்’ செய்யப்பட்டுள்ளது என்றும் சென்சார் போர்டு தெரிவித்துள்ளது. அதன்படி 9 இடங்களில் கட் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இத்திரைப்படத்தில் பிரசன்னா, திரிஷா, பிரியா வாரியர், சிம்ரன், ஜாக்கி ஷரோஃப், அர்ஜூன் தாஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.