சென்னை: தனது இயக்கத்தில் உருவாகிவரும் பியூச்சரிஸ்டிக் ஆக்ஷன் படமான ‘ரெட் ஃப்ளவர்’ கதை, விஜய்க்காக எழுதப்பட்டது என்று ஆண்ட்ரூ பாண்டியன் சொன்னார். இதுகுறித்து அவர் கூறியதாவது: இப்படத்தின் கதையில் விஜய் நடித்தால் எப்படி இருக்கும் என்று நினைத்து எழுதினேன். மூன்றாம் உலகப்போரில் இருந்து நம் இந்தியாவை காப்பாற்றும் ஒரு சீக்ரெட் ஏஜெண்டாக அந்த கதாபாத்திரத்தை நான் வடிவமைத்து இருந்தேன்.
விஜய்யின் பாடிலாங்குவேஜ், ஆற்றல், சக்தி வாய்ந்த திரை இருப்பு ஆகியவை அந்த கதாபாத்திரத்துக்கு பெரிய உத்வேகமாக இருந்தது. அப்படி நான் செதுக்கியுள்ள கேரக்டரில் விக்னேஷ் ஹீரோவாக நடித்துள்ளார். அதிக ஆர்வம், அர்ப்பணிப்பு, உறுதி, கடுமையான முயற்சியுடன் திரையுலகில் செயல்பட்டு வரும் அவர், எனது எதிர்பார்ப்புகளை நிறைவேற்றினார். 9 சண்டை காட்சிகள், 3 பாடல்கள் இடம்பெற்றுள்ள இப்படத்தில், 95 நிமிடங்கள் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே.மாணிக்கம் தயாரித்துள்ளார்.