மும்பை: தெலுங்கு, இந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர், பூஜா ஹெக்டே. கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் அவர், இதற்கு முன்பு தமிழில் ‘முகமூடி’, ‘பீஸ்ட்’ ஆகிய படங்களில் நடித்திருந்தார். தற்போது விஜய் ஜோடியாக ‘ஜன நாயகன்’, சூர்யா ஜோடியாக ‘ரெட்ரோ’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறார். ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் ‘காஞ்சனா 4’ என்ற படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்திய அவர், இந்தியில் வருண் தவான் ஜோடியாக நடிக்கிறார்.
இந்நிலையில், தமிழ் படம் ஒன்றின் ஆடிஷனுக்கு சென்றதை நினைவுகூர்ந்துள்ள அவர் கூறியதாவது: சமீபத்தில் நான் ஒரு தமிழ் படத்துக்காக ஆடிஷனுக்கு சென்றிருந்தேன். ஆனால், திடீரென்று அப்படத்தில் இருந்து நிராகரிக்கப்பட்டேன். காரணம், அந்த கேரக்டருக்கு நான் மிகவும் இளமையாக இருப்பதாக சொன்னார்கள். எனவே, வயதில் மூத்த ஒருவரை தேர்வு செய்தனர். இதற்காக நான் வெட்கப்படவில்லை. எந்த நிலையிலும் ஆடிஷன்களுக்கு செல்ல நான் தயாராக இருக்கிறேன்.
இதில் ஈகோ பார்க்க மாட்டேன். உங்களின் தனிப்பட்ட திறமையில் ஈகோ தலையிட ஒருபோதும் அனுமதிக்காதீர்கள். பலருக்கு ஆடிஷனுக்கு செல்லும் பாக்கியம் கிடைக்காது. வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம் அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சில முன்னணி நட்சத்திரங்கள் கஇன்னும் ஆடிஷனுக்கு சென்று வருகின்றனர்.