ராபின்ஹூட் படம் வருகிற 28ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தில் இருந்து சமீபத்தில் வெளியான ‘அதி தா சர்ப்ரிசு’ பாடலில் கேதிகா சர்மா நடனமாடிய அசைவுகள் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இப்படி தொடர்ந்து வரும் பாடலினால் தற்போது தெலங்கானா மகளிர் ஆணையம் அப்பாடல் தொடர்பாக கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மகளிர் ஆணையத்தின் தலைவர் ஷரதா நெரெல்லா வெளியிட்ட அறிவிப்பில், “பெண்களை இழிவுபடுத்தும் அநாகரீகமான நடன அசைவுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இது தொடர்பாக நிறைய புகார்கள் கமிஷனுக்கு வந்துள்ளது. திரைப்பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடன இயக்குநர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டுமென எச்சரிக்கிறோம். இந்த எச்சரிக்கையை ஆலோசிக்கவில்லை என்றால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க நேரிடும்’ என தெரிவித்துள்ளார்.
மகளிர் ஆணையம் எச்சரிக்கை; தெலுங்கு படங்களில் ஆபாச நடன காட்சிகள்
