சென்னை: ஷங்கரின் மகன் அர்ஜித் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார். அவரின் படத்தை பிரபுதேவா இயக்க உள்ளார். பிரபுதேவா, சமீபத்தில் தனது மகன் ரிஷி ராகவேந்திராவை நடன நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தியிருந்தார். இப்போது ஷங்கரின் மகனையும் சினிமாவில் அறிமுகம் செய்ய உள்ளார். போக்கிரி, எங்கேயும் காதல், இந்தியில் வான்டட் உள்பட பல படங்களை பிரபுதேவா இயக்கியுள்ளார். அந்த வகையில் ஷங்கரும் தனது மகனை பிரபுதேவாவை நம்பி ஒப்படைத்திருக்கிறார். மேலும் இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. ஏற்கனவே ஷங்கரின் மகள் அதிதி, தமிழ் சினிமாவில் ஹீரோயினாக நடித்து வருகிறார். டைரக்ஷன் பயிற்சி எடுத்துள்ள அர்ஜித், நடிப்பில் உள்ள ஆர்வம் காரணமாக ஹீரோவாக அறிமுகமாக உள்ளார்.