சென்னை: போசளர்கள் (ஹொய்சாளர்கள்) வரலாற்று பின்னணியில் ‘திரௌபதி 2’ படம் உருவாக உள்ளது.‘திரௌபதி’, ‘ருத்ரதாண்டவம்’, ‘பகாசூரன்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் மோகன்.ஜி. இவரது அடுத்த படம் ‘திரௌபதி 2’ குறித்து கூறியது: 14ம் நூற்றாண்டில் வாழ்ந்த போசளர்களின் மறைக்கப்பட்ட சரித்திரத்தை சொல்லும் படம் இது. அண்ணல் கந்தார் எழுதிய வீர வல்லாள மகாராஜா என்ற நாவலை தழுவி இந்த படத்தை உருவாக்குகிறேன். சோலா சக்ரவர்த்தி தயாரிக்கிறார். இதில் படைத் தளபதியாக ரிஷி ரிச்சர்ட் நடிக்கிறார்.
நாயகியாக பாரதிராஜா நடித்த மார்கழி திங்கள் படத்தில் நடித்த மாளவிகா நடிக்கிறார். முதல் முறையாக இசையமைப்பாளர் ஜிப்ரானுடன் இணைந்து இதில் பணியாற்றுகிறேன். இந்த கதையில் திரௌபதி என்ற கேரக்டர் இருக்கிறது. அதனாலேயே அந்த தலைப்பை வைத்துள்ளேன். மார்ச் இறுதிக்குள் படப்பிடிப்பு தொடங்கி, இந்த ஆண்டு இறுதியில் படம் வெளியாகும்.
