நாங்கள் அவரவர் வழியில் செல்ல விரும்பி, எங்கள் தனிப்பட்ட காரணங்களுக்காகவே இந்த முடிவை எடுத்தோம். ஒருவர் மீது ஒருவர் அதிகமான மரியாதை வைத்துள்ளோம். எங்கள் வாழ்க்கையில் அடுத்தக்கட்டத்துக்கு செல்கிறோம். இதுபற்றி மேலும் என்ன விளக்கம் தேவைப்படுகிறது என்று புரியவில்லை. நானும், சமந்தாவும் இதையெல்லாம் கடந்து எங்கள் வாழ்க்கையை நடத்தி வருகிறோம். அப்போது நான் மீண்டும் ஒரு காதல் கொண்டேன். இப்போது நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
விவாகரத்து விவகாரம் என் வாழ்க்கையில் மட்டும் நடந்தது போல் ஏன் ஒரு குற்றவாளியாக கருதப்படுகிறேன்? திருமண உறவில் இருக்கும்போது மிகவும் சிந்தித்து, அதிக மரியாதையுடன் பிரிந்து செல்லும் முடிவை எடுத்தேன். இதை ஏன் சொல்கிறேன் என்றால், எனக்கு இது மிகவும் சென்சிடிவ்வான ஒரு விஷயம். காரணம், உடைந்த ஒரு குடும்பத்தில் இருந்து வந்தவன் நான். எனவே, அந்த அனுபவத்தை நான் நன்றாக அறிவேன். ஒரு உறவை விட்டுப் பிரிந்து செல்லும் முன்பு ஆயிரம் முறையாவது யோசிப்பேன். ஏனெனில், அதன் விளைவுகளை அறிவேன். இருவரும் பரஸ்பரம் பேசித்தான் முடிவு செய்தோம். ஒரே இரவில் அந்த முடிவை நாங்கள் எடுக்கவில்லை.
