குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் உலா வரும் யானை கூட்டம்-வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை

குன்னூர் :  குன்னூர் -மேட்டுப்பாளையம் மலை பாதையில் காட்டு யானை முகாமிட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல என வனத்துறையி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.வனங்கள் நிறைந்த பகுதியில் நடுவே குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதை அமைந்துள்ளது.சாலையோரம் பசுமையான மரம், செடி, கொடிகள் உள்ளதால் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் இங்கு வந்து மேய்கின்றன. இதுதவிர மேய்ச்சல் தேடி சமவெளிப் பகுதிகளில் இருந்து குன்னூர் –  மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் யானைகள் முகாமிட்டுள்ளன.யானைக்கூட்டங்கள் குடிநீர், உணவு தேடி அவ்வப்போது சாலையை கடக்கின்றன. தற்போது கேஎன்ஆர் அருகே குழுக்களாக யானைகள் பிரிந்து சாலையோர வனப்பகுதியில்  உள்ளன. இந்த  யானைகள் சாலைக்கு வராமல் தடுக்கும் முயற்சியில் வனத்துறையினர், ஈடுபட்டுள்ளனர்.அருகில் உள்ள ஆதிவாசி கிராமத்திற்குள் நுழையாமல் இருக்க வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்டி வருகின்றனர்.சாலைக்கு வரும் யானைகளை போட்டோ  எடுத்து தொந்தரவு செய்யக்கூடாது. வாகன ஓட்டிகள் கவனமாக செல்லவேண்டும் என்று  வனத்துறை வாகன  எச்சரிக்கை விடுத்துள்ளனர்….

The post குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் உலா வரும் யானை கூட்டம்-வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: