ரூ.1843.85 கோடியில் 11 சாலைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

 

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில், நெடுஞ்சாலை துறை சார்பில் சேலம், நாமக்கல், கோயம்புத்தூர், திருவண்ணாமலை, திருப்பூர் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் ரூ.1843.85 கோடியில் அமைக்கப்பட்டுள்ள 11 சாலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

ரூ.50 கோடியில் 5.6 கி.மீ நீளத்திற்கும் 4 வழிச்சாலையாக அகலப்படுத்தி உறுதிப்படுத்தப்பட்ட காஞ்சிபுரம் – வந்தவாசி சாலை, தஞ்சாவூர் – மன்னார்குடி – திருத்துறைப்பூண்டி – வேதாரண்யம் – கோடியக்கரை சாலையை இணைக்கும் வகையில் இரு வழிச்சாலையாக புதியதாக அமைக்கப்பட்டுள்ள மன்னார்குடி சுற்றுவட்ட சாலை என மொத்தம் ரூ.1843.85 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள 11 சாலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எ.வ.வேலு, கயல்விழி செல்வராஜ், தலைமை செயலாளர் முருகானந்தம், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதேபோல், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், ரூ.211.90 கோடியில் 45 முடிவுற்ற பணிகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Related Stories: