பனிமலர் என்ஜினீயரிங் கல்லூரியில் 946 மாணவர்களுக்கு பட்டமளிப்பு: ஹெச்சிஎல் இயக்குநர் பங்கேற்பு

 

சென்னை:பூந்தமல்லி பனிமலர் இன்ஜினியரிங் கல்லூரியின் 22வது பட்டமளிப்பு விழாவில் 964 மாணவர்களுக்கு பட்டங்களை, ஹெச்சிஎல் நிறுவன இயக்குநர் பிரசாத் வழங்கினார். பூந்தமல்லியில் அமைந்துள்ள பனிமலர் என்ஜினீயரிங் கல்லூரியின் 22வது பட்டமளிப்பு விழா, கல்லூரி தாளாளர் ப.சின்னதுரை தலைமையில் நேற்று நடந்தது. இயக்குநர் சி.சக்திகுமார் முன்னிலை வகித்தார். முதல்வர் கே.மணி அனைவரையும் வரவேற்று, ஆண்டு அறிக்கை வாசித்தார். முதன்மை அலுவலர் எஸ்.பிரசன்னா தேவி, மாணவர்களின் ரேங்க் பட்டியலை வெளியிட்டார்.

சிறப்பு விருந்தினராக ஹெச்சிஎல் நிறுவனத்தின் இயக்குநர் பி.பிரசாத் கலந்துகொண்டு, பல்கலைக்கழக அளவில் ரேங்க் எடுத்த 40 மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப் பரிசு மற்றும் பதக்கங்களையும், 946 மாணவ – மாணவிகளுக்கு பட்டங்களையும் வழங்கி, வாழ்த்தி பேசியதாவது: பட்டம் பெறும் மாணவர்களாகிய நீங்கள், கல்வி கற்க உதவிய பெற்றோர்களுக்கும், கல்வி வழங்கிய ஆசியர்களுக்கும், கல்லூரிக்கும் நன்றி சொல்ல வேண்டும். பனிமலர் கல்லூரி உங்களுக்கு வாய்ப்பு வழங்குகிறது.

தரமான கல்வியே உங்களின் உயர்வுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும். பல்வேறு நிறுவனங்களை வரவழைத்து, உங்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குகின்றனர். நீங்கள் அறிவியல் மூலம் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி சமுதாய முன்னேற்றத்திற்கு உதவ முன்வர வேண்டும், நீங்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல் புதிய நிறுவனங்களை உருவாக்கி தொழில் முனைவர்களாக உருவாகி, பலருக்கு வேலை வழங்க வேண்டும், இந்தியாவின் முன்னேற்றத்திற்கு அது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: