ஏற்கனவே 3 விருது பெற்ற நிலையில் இந்திய இசைக் கலைஞர் ரிக்கி கெஜ்ஜுக்கு ‘கிராமி’ விருது

லாஸ் ஏஞ்சல்ஸ்: சுற்றுச்சூழல் தூய்மை குறித்து வலியுறுத்திய இந்திய இசைக் கலைஞர் ரிக்கி கெஜ்ஜுக்கு ‘கிராமி’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அவர் 3 கிராமி விருது பெற்றுள்ளார். சர்வதேச அளவில் இசைத் துறையில் சாதித்தவர்களுக்காக ‘கிராமி’ விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. நேஷனல் ரெக்கார்டிங் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் அல்லது லத்தீன் அகாடமி ஆஃப் ரெக்கார்டிங் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் மூலம் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது.

அந்த வகையில் இந்தாண்டுக்கான கிராமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான விருது வழங்கும் விழா அடுத்தாண்டு பிப். 2ம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கிறது. கிராமி விருது பட்டியலில் பரிந்துரைக்கப்பட்டவர்களில் இந்திய இசைக்கலைஞர் ரிக்கி கேஜ் பெயரும் இடம் பெற்றுள்ளது. ஏற்கனவே 3 முறை கிராமி விருது பெற்ற இவர், தற்போது நான்காவது முறையாக கிராமி விருதுக்கு தேர்வாகியுள்ளார். இவரது சுற்றுச்சூழல் இசை ஆல்பமான ‘பிரேக் ஆஃப் டான்’-க்கு கிடைத்துள்ளது.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், ‘ஏற்கனவே மூன்று கிராமி விருதுகளை வென்றுள்ளேன். தற்போது 4வது முறையாக இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளேன். சுற்றுச்சூழல் ஆர்வலராக இருந்து வரும் நான், வாழும் இடங்களை தூய்மையாக வைக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக உள்ளேன். இதனை இந்திய கலாசாரம் நமக்குக் கற்பிக்கிறது. சுற்றுச்சூழல் தூய்மையாக இருக்க வேண்டுமானால், நாம் நம்முடைய மனதை தூய்மைப்படுத்த வேண்டும். இசையின் மூலம் சுற்றுச்சூழல் உணர்வுள்ள சமூகத்தை உருவாக்க முடியும் என்று நம்புகிறேன். அந்த நம்பிக்கையில் எடுக்கப்பட்ட ‘பிரேக் ஆஃப் டான்’ என்ற ஆல்பத்திற்கு தான் கிராமி விருது கிடைத்துள்ளது’ என்று கூறினார்.

Related Stories: