விக்ராந்த் படத்துக்கு ஹங்கேரியில் இசை

சென்னை: ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தீபக் குமார் தாலா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஜெயபால்.ஜெ, எழுதி இயக்கியிருக்கும் படம், ‘தீபாவளி போனஸ்’. விக்ராந்த், ரித்விகா நடித்திருக்கிறார்கள். இப்படத்தை ஆக்‌ஷன் ரியாக்‌ஷன் நிறுவனம் சார்பில் ஜெனீஷ் வெளியிடுகிறார். இயக்குநர் ஜெயபால், உலக மாணவர்கள் கீதம் என்ற தலைப்பில் சுமார் 78 நாடுகளில் யுனஸ்கோ அமைப்பால் ஒளிபரப்பப்படும் பாடலை இயக்கியிருப்பவர். படம் பற்றி இயக்குநர் ஜெயபால் கூறுகையில், ‘தீபாவளி பண்டிகை வருவதற்கு மூன்று நாட்கள் இருக்கும் போது தொடங்கும் கதை, தீபாவளி பண்டிகையின் போது முடிவடையும். ஒரு நடுத்தர குடும்பம் பண்டிகை கொண்டாட்டத்திற்கு எப்படி தயராகிறார்கள் என்பதை எளியவர்களின் வாழ்வியலாக மட்டும் இன்றி காட்சி மொழியில் பிரமாண்டமாகவும் சொல்லியிருப்பது படத்தின் தனி சிறப்பாக இருக்கும்

’9 திருடர்கள்’, ‘பேய்கள் ஜாக்கிரதை’ போன்ற படங்களுக்கு இசையமைத்த மரிய ஜெரால்டு படத்திற்கு இசையமைத்திருக்கிறார். சந்தோஷ் நாராயணன் சார் ஒரு பாடல் பாடல், அந்தோணி தாசன் சார் ஒரு பாடல் பாடியிருக்கிறார்கள். பாடகி அக்‌ஷரா ஒரு பாடல் பாடியிருக்கிறார். மூன்று பாடல்களும் சிறப்பாக வந்திருக்கிறது. படத்தின் பின்னணி இசை நிச்சயம் பேசப்படும். ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் இளையராஜா ஆகியோர் தங்களது பணிகளை மேற்கொள்ளும் ஹங்கேரியில் உள்ள புத்தாபெஸ்ட் ஸ்டுடியோவில் தான் எங்கள் படத்தின் பாடல்கள் ஒலிப்பதிவு மற்றும் பின்னணி இசை சேர்ப்பு பணிகள் நடைபெற்றது’ என்றார்.

The post விக்ராந்த் படத்துக்கு ஹங்கேரியில் இசை appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: