மும்பை: பாலிவுட்டை தொடர்ந்து பல்வேறு தரப்பு ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகையாக வலம் வரும் திரிப்தி டிம்ரி, கடந்த ஆண்டு ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர் நடிப்பில் பல்வேறு மொழிகளில் வெளியான ‘அனிமல்’ என்ற படத்தில், சோயா என்ற முக்கியமான கேரக்டரில் நடித்திருந்ததன் மூலமாக பிரபலமானார். அவரது கேரக்டருக்கு அதிக வரவேற்பு கிடைத்தது ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் அவரை ரசிகர்களும், நெட்டிசன்களும் கடுமையாக விமர்சனம் செய்தனர்.
இதுகுறித்து திரிப்தி டிம்ரி கூறியது வருமாறு: இப்படத்தில் நான் சோயா என்ற முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு முக்கிய காரணம், எனக்கு ஒரு பாதுகாப்பான கதாபாத்திரத்தில் நடிப்பது பிடிக்காது. வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிப்பதையே நான் விரும்புவேன் என்பதுதான். திரைப்படங்களில் எல்லாப் பக்கங்களையும் ஆராய்ந்து தெரிந்துகொள்வதற்கு விரும்பினேன்.
நடிப்பு என்பதை வெறும் நடிப்பாக மட்டுமே பார்க்க வேண்டும். அதனால்தான் சோயா கதாபாத்தி ரத்தை விரும்பி தேர்ந்தெடுத்து நடித்தேன். இப்போது அதுபற்றி யார், என்ன விமர்சனம் செய்தாலும் சரி. அதுபற்றி எனக்கு எந்தவொரு கவலையும் இல்லை. அடுத்தடுத்து நான் ஒப்பந்தமாகும் படங்களில் அதிகமாக கவனம் செலுத்தி நடிக்கிறேன்.
The post விமர்சனங்களைப் பற்றி கவலையில்லை: திரிப்தி டிம்ரி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.