சிரஞ்சீவி கின்னஸ் சாதனை: ஆமிர்கான் விருது வழங்கினார்

ஐதராபாத்: சிரஞ்சீவியின் நடனத்திற்கு கின்னஸ் உலக சாதனை பெருமை கிடைத்துள்ளது. திரைப்படங்களில் அதிக பாடல்களுக்கு நடனமாடிய நடிகராக சிரஞ்சீவி வரலாறு படைத்துள்ளார். இதன் மூலம் கின்னஸ் உலக சாதனையுடன் சிரஞ்சீவியை கௌரவித்தனர். இதற்காக ஐதராபாத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு சிரஞ்சீவிக்கு கின்னஸ் உலக சாதனை விருது வழங்கப்பட்டது. கடந்த 46 ஆண்டுகளாக சிரஞ்சீவி டோலிவுட்டில் ஈடு இணையற்ற ஆதிக்கத்தை வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக சிரஞ்சீவி தனது படங்களில் நடனம் மூலம் புதிய போக்கையே உருவாக்கினார். 69 வயதாகும் சிரஞ்சீவிதான் அதிக பாடல்களுக்கு நடனம் ஆடியவர். 143 திரைப்படங்களில் 537 பாடல்களுக்கு சிரஞ்சீவி நடனமாடி இருக்கிறார். அதில் 24 ஆயிரம் நடன ஸ்டெப்புகள் இருப்பது தான் தற்போது கின்னஸ் சாதனையாக கருதப்படுகிறது. பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஆமிர்கான் சிரஞ்சீவிக்கு கின்னஸ் சாதனை விருதை வழங்கினார். இதுவரை சிரஞ்சீவி மொத்தம் 156 படங்களில் நடித்துள்ளார்.

The post சிரஞ்சீவி கின்னஸ் சாதனை: ஆமிர்கான் விருது வழங்கினார் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: