சென்னை: சீனு ராமசாமி இயக்கத்தில் 8வது படமாக வெளியாகவுள்ள படம் ‘கோழிப்பண்ணை செல்லதுரை’. இப்படத்தில் ஏகன், யோகி பாபு, பிரிகிடா, சத்யா, ஐஸ்வர்யா தத்தா, பவா செல்லதுரை, மானஸி கொட்டாச்சி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அருளானந்து – மேத்யூ அருளானந்து தயாரிக்கும் இப்படத்திற்கு என்.ஆர் ரகுநந்தன் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற செப்டம்பர் 20ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசுகையில், “இந்த மாதிரியான ஒரு மேடையில் 14 வருஷத்திற்கு முன்பு நிற்கும்போது ஏகன் அளவிற்கு எனக்கு தைரியம் இல்லை, மிகவும் நடுக்கத்தோடுதான் இருந்தேன். ஆனால் ஏகன் முகத்தில் நல்ல தைரியம் இருக்கிறது. ட்ரைலர் மற்றும் பாடல்களில் ஏகனை பார்க்கும்போது அவர் கொடுக்கும் முகபாவனை மிகவும் அழகாக இருந்தது.
தன்னை நம்பி ஒரு தயாரிப்பாளர் பணம் செலவழித்தால் படத்தை முடிந்த அளவிற்கு சிக்கனமாக எடுத்து கதையை பார்வையாளர்களுக்கு புரியும் வகையில் எடுத்துவிடுவார் சீனு ராமசாமி. நான் பார்த்து வியந்த மிகச்சிறந்த இயக்குநர் சீனு ராமசாமி. எனக்கு அவர் வாய்ப்பு கொடுத்து இதுவரை நான்கு படங்களில் நடித்திருக்கிறேன். நான் இருந்த இடத்தில் இப்போது ஏகன் இருக்கிறார். இது எப்படி இருக்கிறது என்றால் கடந்த காலமும் நிகழ் காலமும் இருப்பதுபோல் உள்ளது. ஆனால் ஏகனின் எதிர்காலம் என்னைவிட நல்லா வரவேண்டும்” என்றார்.
The post ஒரே இடத்தில் கடந்த காலமும் நிகழ் காலமும்: விஜய் சேதுபதி நெகிழ்ச்சி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.