ஒடிடியில் வெளியாகிறது கீர்த்தி சுரேஷின் ‘ரகுதாத்தா’ திரைப்படம்!

ஹோம்பாலே ஃபிலிம்ஸின் ‘ரகுதாத்தா’ இந்தி திணிப்பு மற்றும் ஆணாதிக்கத்தைப் பற்றிப்பேசும் ஒரு அற்புதமான படம், சுமன் குமார் இயக்கத்தில் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ரகுதாத்தா ஜீ5 யில் 13 செப்டம்பர் 2024 அன்று உலகளவில் டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படுகிறது. ஹோம்பாலே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் தயாரிப்பில், திறமை மிகு இயக்குநர் சுமன் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த பொழுதுபோக்கு டிராமா படத்தில் தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் உட்பட பல முன்னணி நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

சமூகப் பிரச்சினைகளின் வேரை ஆராயும் கதைக்களத்தில், மெலிதான நகைச்சுவையுடனும் அழுத்தமான திரைக்கதையுடனும், ஒரு புரட்சிகரமான பெண்ணின் பயணத்தைச் சொல்கிறது ‘ரகுதாத்தா’. செப்டம்பர் 13 முதல் ஜீ5 இல் பார்வையாளர்கள் ‘ரகுதாத்தா’வை பிரத்தியேகமாக பார்த்து மகிழலாம் .ரகுதாத்தா தமிழிலும், தெலுங்கு மற்றும் கன்னடத்திலும் டப் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது.

நடிகை கீர்த்தி சுரேஷ் இதுகுறித்துக் கூறுகையில்; பெண் சுதந்திரத்தை நம்பும் “கயல்விழியின் கதாபாத்திரத்தில் நடித்த ‘ரகுதாத்தா’ திரைப்படம் என் மனதுக்கு நெருக்கமான சிறப்பான பயணமாக அமைந்தது. இயக்குநரின் கதையை உயிர்ப்பிப்பது சவாலாக இருந்தது. உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்கள் இந்த அட்டகாசமான கதையை ஜீ5 இல் காணவுள்ளதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், மேலும் இது நாங்கள் எடுத்துக்கொண்ட கருப்பொருள்களைச் சுற்றி அர்த்தமுள்ள உரையாடல்களைத் தொடர்ந்து தூண்டும் என்று நம்புகிறேன்.

ஹோம்பாலே பிலிம்ஸின் நிறுவனர் விஜய் கிரகந்தூர் கூறுகையில், “ரகுதாத்தா’வின் உலக டிஜிட்டல் பிரீமியர் காட்சிக்காக ஜீ5 உடன் இணைந்து செயல்படுவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். ‘ரகுதாத்தா’ எங்கள் தயாரிப்பில் மிக முக்கியமான திரைப்படமாகும், ஏனெனில் இது முக்கியமான சமூகப் பிரச்சினைகளை உணர்ச்சிப்பூர்வமாகும் அதே நேரத்தில் நகைச்சுவையுடன் உரையாடுகிறது.

‘ரகுதாத்தா’ படத்தின் இயக்குநர் சுமன் குமார், ‘ரகுதாத்தா’ இப்படத்தை உருவாக்கியது ஒரு அழகான பயணம். இந்தத் திரைப்படம் மொழி அரசியல் மற்றும் பாலினப் பாகுபாடுகள் குறித்து பார்வையாளர்களிடையே அர்த்தமுள்ள உரையாடல்களை ஏற்படுத்தியது மிக மகிழ்ச்சியைத் தந்தது. தமிழ்செல்வனாக நடித்துள்ள ரவீந்திர விஜய் உட்பட ஒட்டுமொத்த நடிகர்களும் இந்த கதாபாத்திரங்களை நம்பகத்தன்மையுடையதாக மாற்றுவதில் தங்கள் முழு உழைப்பை வழங்கினர். என மகிழ்வுடன் தெரிவித்துள்ளார்.

The post ஒடிடியில் வெளியாகிறது கீர்த்தி சுரேஷின் ‘ரகுதாத்தா’ திரைப்படம்! appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: