முஃபாசா: தி லயன் கிங்‘ படத்திற்காக மகன்களுடன் டப்பிங் பேசிய ஷாருக்கான்!

‘முஃபாசா: தி லயன் கிங்’ திரைப்படத்தின் பிரம்மாண்ட டிரெய்லர் வெளியாகி உள்ளது. தி லயன் கிங் பட வரிசையில் இதனை வால்ட் டிஸ்னி நிறுவனம் தயாரித்துள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன்னர் கடந்த 1994ம் ‘தி லயன் கிங்’ அனிமேஷன் திரைப்படம் வெளியானது. குழந்தைகளுக்கு மட்டுமல்லாது பெரியவர்களுக்கும் பிடித்த படம், `தி லயன் கிங்‘ மேலும் `டிமோன் அண்ட் பும்பா’ கார்ட்டூனாகவும் டிவியில் ஒளிபரப்பானது. அதில் இடம்பெறும் சிங்கத்தை மையமாக வைத்து உருவான `தி லயன் கிங்’ கதை 1994ம் ஆண்டு அனிமேஷன் படமாகவும், அதன் சினிமாட்டிக் ரீமேக் 2019ம் ஆண்டு தத்ரூபமான வடிவமைப்பில் சமீபத்திய தொழில்நுட்பங்களைக் கொண்ட கிராபிக் படமாகவும் (Photo realisitic) வெளியானது. வால்ட் டிஸ்னி நிறுவனம் தயாரிப்பில் வெளியான இப்படத்தை ஜான் ஃபேவ்ரியு இயக்கினார். வசூல் ரீதியாகவும் பாக்ஸ் ஆஃபிஸில் ஹிட் அடித்தது. குறிப்பாக 90களில் குழந்தைகளாக இருந்தவர்கள் பலரும் 2019ம் ஆண்டு ‘தி லயன் கிங்‘ படத்திற்கு ஃபேவரைட் பட்டனை அழுத்தினார்கள்.

இந்நிலையில் அதன் அடுத்தப் பாகமான ‘முபாசா: தி லயன் கிங்’ (Mufasa: The Lion King) வெளியாக இருக்கிறது. காட்டுக்கே ராஜாவான முஃபாசா கடந்து வந்த பாதையையும், அதன் சகோதரனான ஸ்காரையும் மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. வருகிற டிசம்பர் 20ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் இதன் இந்தி வெர்ஷனுக்காக இந்தி நடிகர் ஷாருக்கான் அவரது மகன்களான ஆர்யன் கான், ஆப்ராம் கான் ஆகியோருடன் இணைந்து டப்பிங் பேசியிருக்கிறார். இது குறித்து ஷாருக்கான் ‘ டிஸ்னியுடன் இணைவதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன். என்னுடைய மகன்களான ஆர்யனும், ஆப்ரானும் கூட இந்தப் பயணத்தில் இணைகிறார்கள் என்பதால் எனக்கு இது ரொம்பவே சிறப்பானது‘ என தனது சந்தோஷத்தையும் பகிர்ந்திருக்கிறார் ஷாருக்கான்.

The post முஃபாசா: தி லயன் கிங்‘ படத்திற்காக மகன்களுடன் டப்பிங் பேசிய ஷாருக்கான்! appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: