உவரி கடலில் உயிருக்குப் போராடிய யோகி பாபு

சென்னை: சிம்புதேவன் இயக்கத்தில் யோகி பாபு கதையின் நாயகனாக நடித்துள்ள படம், ‘போட்’. ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். முக்கிய வேடங்களில் கவுரி கிஷன், எம்.எஸ்.பாஸ்கர், சின்னி ஜெயந்த், குலப்புள்ளி லீலா, சாம்ஸ், மதுமிதா நடித்துள்ளனர். வரும் ஆகஸ்ட் 2ம் தேதி படம் திரைக்கு வருகிறது. இந்தியாவில் சுதந்திரப் போராட்டம் தீவிரமடைந்த காலக்கட்டத்தில் நடக்கும் இக்கதை, பரபரப்பான ஒரு உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ‘போட்’ படத்தைப் பார்த்த ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான பி.சி.ஸ்ரீராம், ‘சிம்புதேவனின் ‘போட்’ படத்தின் பிரத்தியேக காட்சியைப் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இப்படம் இந்திய சினிமாவின் மற்றொரு மைல் கல்லாக இருக்கும். இது அற்புதமான அனுபவமாக இருந்தது’ என்று பாராட்டினார்.

படத்தப் பற்றி சிம்புதேவன் கூறுகையில், ‘படத்தின் 85 சதவீத காட்சிகள் தூத்துக்குடி உவரி கடலில் படமானது. கடலின் தன்மையை முழுமையாகப் புரிந்துகொண்ட பிறகே படப்பிடிப்பு நடத்தினேன். பாதுகாப்புக்கு மீனவர்களை நியமித்தேன். அவர்களின் படகுகள் கண்காணாத தூரத்தில் இருக்கும். பல சிரமங்களை எதிர்கொண்டு ஷூட்டிங் நடத்தினேன். அப்போது ஒருநாள், படகில் இருந்து யோகி பாபு கடலில் குதிக்கும் ஒரு காட்சியைப் படமாக்கினேன். எதிர்பாராவிதமாக கடலில் விழுந்து உயிருக்குப் போராடிய யோகி பாபுவை மீனவர்கள் சிலர் வந்து காப்பாற்றினர். முன்னதாக அவர் நீச்சலடித்தபடியே படகில் ஏற முயற்சித்தார். அவரது துணிச்சல் பாராட்டுக்குரியது’ என்றார்.

The post உவரி கடலில் உயிருக்குப் போராடிய யோகி பாபு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: