அஜித் – பிரசாந்த் நீல் கூட்டணி கிடையாது

சென்னை: அஜித், பிரசாந்த் நீல் இணைந்து படம் செய்வதாக வந்த தகவல் பொய் என்பது தெரியவந்துள்ளது. ‘கேஜிஎஃப்’, ‘கேஜிஎஃப் 2’ படங்கள் மூலம் பிரபலம் ஆனார் இயக்குனர் பிரசாந்த் நீல். இதில் ‘கேஜிஎஃப் 2’ படம் மட்டுமே ரூ.1100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இதையடுத்து ‘சலார்’ என்ற படத்தை பிரபாஸ் நடிப்பில் இயக்கினார். அடுத்ததாக சலார் 2 இயக்கி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அஜித்தை சந்தித்து பிரசாந்த் நீல் பேசினார்.

உடனே சிலர் இந்த சந்திப்பு, படம் தொடர்பானது என்றும் இருவரும் சேர்ந்து 2 படங்களில் பணியாற்ற இருக்கிறார்கள் என்றும் அதில் ஒன்று, ‘கேஜிஎஃப்’ படத்தின் 3வது பாகம் என்றும் தகவல் பரப்பினர். இது உண்மை என்பதுபோல் வேறு சிலரும் இந்த தகவலை சினிமா வட்டாரத்தில் பரப்பிவிட்டனர். ஆனால் இவை எல்லாமே பொய் தகவல்கள் என்பது தெரியவந்துள்ளது.

அஜித்தும் பிரசாந்த் நீலும் ஒருவர் மீது ஒருவர் மரியாதை வைத்திருப்பவர்கள். அதனால் மட்டுமே இந்த சந்திப்பு நடந்தது. மற்றபடி இருவரும் சேர்ந்து படம் எதுவும் செய்யவில்லை. பிரசாந்த் நீல், ‘சலார் 2’ முடித்த பிறகு ஜூனியர் என்டிஆர் நடிக்கும் படத்தைதான் இயக்கப்போகிறார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

The post அஜித் – பிரசாந்த் நீல் கூட்டணி கிடையாது appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: