பொன்னமராவதி அருகே சுயம்பு ஆதிசிவன் கோயில் கும்பாபிஷேகம்

பொன்னமராவதி: பொன்னமராவதி அருகே உள்ள கேசராபட்டி காசிலிங்கம்பாளையம் ஓம்ஸ்ரீரணகாளி முத்தம்மன் உடனாகிய சுயம்பு ஆதிசிவன் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவையொட்டி கடந்த 13ம் தேதி காளி முத்தம்மன் சுவாமி ஊர்வலம் கோயிலில் தொடங்கி ஒயிலாட்டம், தாளம் தப்பட்டத்துடன் கேசராபட்டி, உலகம்பட்டி, கண்டியாநத்தம், புதுப்பட்டி, கொப்பனாபட்டி, பொன்னமராவதி வலையபட்டி வழியாகச் சென்று வந்தது. இதனைத் தொடர்ந்து கோயிலில் சுவாமி பிரஷ்டை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் கோயில் முன் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று காலை காசி பகவான் சுகானந்த சித்தர் தலைமையில் 10அடி உயரமுள்ள ரணகாளிமுத்தம்மன் சிலையில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர்.

இதனைத்தொடர்ந்து கணக்கம்பட்டி சற்குரு பழனிச்சாமி சிலையும், ஆதிகுரு பகவான் ஆண்டியப்ப சித்தர் சிலையும் நிறுவப்பட்டு புனிதநீர் ஊற்றப்பட்டது. தழிழாசிரியர் முருகேசன், முத்தமிழ்பாசறை அறங்காவலர் ராமச்சந்திரன், இளையராஜா ஆகியோர் கும்பாபிஷேகத்தை நேர்முகவர்னனை செய்து ஆன்மீக சொற்பொழிவாற்றினர். பொன்னமராவதி சப்இன்ஸ்பெக்டர்கள் பிரபாகரன், மாயலகு ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு மகமாயி என்னும் நாடகம் நடைபெற்றது. ஏற்பாடுகளை கணக்கம்பட்டி சற்குரு பழசிச்சாமிசித்தர்பீடஅன்பர்கள், கேசராபட்டி காசிலிங்கபாளையம் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.

Related Stories: