மும்பை: பாலிவுட் நடிகர் கோவிந்தாவுக்கும், அவரது மனைவி சுனிதா அஹுஜா தம்பதிக்கும் திருமணமாகி 37 ஆண்டுகள் ஆகிறது. கடந்த 2024 முதலே அவர்கள் குடும்ப வாழ்க்கை யில் கசப்புணர்வு ஏற்பட்டுள்ள தாகவும், விரைவில் விவாகரத்து பெறப்போவதாகவும் தகவல் வெளியாகி வந்தது. இதுகுறித்து சுனிதா அஹுஜா அளித்த பேட்டி வருமாறு: எனது கணவர் வேறொரு பெண்ணுடன் ரகசியமாக பழகி வருகிறார். அந்த பெண் அவரை நேசிக்கவில்லை. பணத்துக்காக மட்டுமே பழகுகிறார்.
நடிகைகள் மீது எனக்கு தனி மரியாதை இருக்கிறது. ஆனால், தவறான எண்ணமுள்ள பெண்களை ஏற்றுக் கொள்ள முடியாது. கோவிந்தாவின் வாழ்க்கையில் அவரது மறைந்த தாய் மற்றும் மனைவி, மகள் ஆகிய பெண்களுக்கு மட்டுமே இடம் இருக்கிறது. மற்றவருக்கு இடம் இல்லை. பணத்துக்காக மட்டுமே தன்னுடன் இருக்கும் ஜால்ராக்களை விட்டு விலகி, குடும்பம் மற்றும் தொழிலில் எனது கணவர் கவனம் செலுத்த வேண்டும் என்பதே எனது ஆசை.
