உணவு ஒவ்வாமையை தெரிந்துகொள்ளாமல் அவதிப்பட்டேன்: தமன்னா

மும்பை: பான் இந்தியா ஸ்டாராக மாறியுள்ள தமன்னா, கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கி வருகிறார். இந்நிலையில், தனது அழகின் ரகசியம் குறித்து பேசியுள்ளார். அது வருமாறு: ஒருநாள் எனது நாயை வெளியில் அழைத்துக்கொண்டு செல்லும் ஒருவர் என்னை சந்தித்தார். எனது முகத்தில் சில பருக்கள் இருந்தது. ‘உங்களுக்கு கூட முகப்பரு வருமா?’ என்று ஆச்சரியமாக கேட்ட அவரிடம், ‘நாங்களும் மற்ற பெண்களை போலத்தான். முகப்பருக்கள் நிறையவே வரும்’ என்று சொன்னேன்.

எனது எச்சிலை முகப்பருக்களின் மீது தடவி சரிசெய்கிறேன். காலையில் வெறும் வாயிலுள்ள எச்சிலை அதற்கு பயன்படுத்த வேண்டும். அறிவியல் ரீதியாக காலையில் நம் வாயிலுள்ள எச்சிலில் பாக்டீரியா எதிர்ப்பு பொருட்கள் அதிகமாக இருக்கும். அது முகப்பருக்களுக்கு எதிராக வேலை செய்யும். இது எனக்கு நன்றாகவே வேலை செய்கிறது.

சருமத்தை பாதிக்கக்கூடிய எந்த உணவையும் நான் சாப்பிட மாட்டேன். பலர் தங்களுக்கு இருக்கும் உணவு ஒவ்வாமை குறித்து தெரிந்துகொள்வதே இல்லை. பல ஆண்டுகளாக நான் கோதுமை, பார்லி போன்ற பொருட்கள் மற்றும் பால் பொருட்களாலும் ஏற்படும் ஒவ்வாமை குறித்து தெரிந்துகொள்ளாமல் அவதிப்பட்டேன். அதையெல்லாம் தவிர்த்த பிறகுதான் என்னுடைய சரும அழகில் முன்னேற்ற நிலையை கண்டேன்.

Related Stories: