மன்னார்குடி கோயிலில் கோலாட்ட உற்சவம் : பக்தர்கள் குவிந்தனர்

மன்னார்குடி: மன்னார்குடி  ராஜகோபால சுவாமி  கோயிலில் கோலாட்ட உற்சவம் கொண்டாடப் பட்டது. ஏராளமான பக்தர்கள் கோலாட்டம் ஆடி சுவாமியை தரிசனம் செய்தனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பிரசித்தி பெற்ற வைணவ தலமான  ராஜ கோபால சுவாமி  கோயில் உள்ளது. இக்கோயிலில் ராஜகோபாலசாமி  கிருஷ்ணராக பக்தர்களுக்கு  அருள்பாலிக்கிறார். இங்கு  ஆண்டுதோறும்  ஐப்பசி மாதத்தை முன்னிட்டு கோலாட்ட உற்சவம் 10 நாட்கள்  நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான கோலாட்ட உற்சவம் கடந்த 6ம் தேதி முதல் துவங்கியது.

அதில் 8 ம் நாளான நேற்று கோயில் பிரகாரத்தில் கிருஷ்ணபிரேமி குழுவினர் மற்றும்  100க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோலாட்டம் ஆடி உற்சவத்தை  வெகு விமரிசையாக நடத்தினர். சன்னதியிலிருந்து கையில் சாட்டை குச்சி ஏந்தி சிறப்பு அலங்காரத்தில் வந்த ராஜகோபால சுவாமியை சன்னதியின் முன்பு திரண்டு இருந்த பக்தர்கள் கோலாட்டம் ஆடி வரவேற்றனர். பின்னர் கோயிலில் முற்றவெளியில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.  அப்போது சுவாமிக்கு தீபாராதனை காட்டப்பட்டது. அதனை தொடர்ந்து பக்தர்கள் சாமியை சுற்றி வலம் வந்தபடியே கோலாட்டம் ஆடி வழிபட்டனர்.

Related Stories: