டப்பிங் பேச முடியாமல் சிரமப்பட்டேன்: விமல்

சென்னை: சார்க் 9 பிக்சர்ஸ் சார்பில் சிவா கில்லரி தயாரிக்க, மைக்கேல் கே.ராஜா எழுதி இயக்கியுள்ள படம், ‘போகுமிடம் வெகுதூரமில்லை’. விமல், கருணாஸ், மேரி ரிக்கெட்ஸ், அருள்தாஸ், தீபா சங்கர், ‘ஆடுகளம்’ நரேன், மனோஜ் குமார், பவன், சார்லஸ் வினோத், வேல.ராமமூர்த்தி நடித்துள்ளனர். டெமில் சேவியர் எட்வர்ட்ஸ் ஒளிப்பதிவு செய்ய, என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைத்துள்ளார். இப்படம் குறித்து மைக்கேல் கே.ராஜா கூறுகையில், ‘விமல் பற்றி என்னென்னவோ சொன்னார்கள். அதைக்கேட்டு பயமாக இருந்தது. ஆனால், காலையில் 7 மணிக்கு ஷூட்டிங் என்றால் மேக்கப்புடன் வந்து நிற்பார். முழுமையான அர்ப்பணிப்புடன் நடித்துள்ளார். அதிக டயலாக் இருக்காது. முகபாவனைகளில் நடிக்க வேண்டும். அதைப் புரிந்துகொண்டு நடித்து அசத்தியுள்ளார்’ என்றார்.

விமல் கூறும்போது, ‘நிறைய புது இயக்குனர்களுடன் பணியாற்றி இருக்கிறேன். அவர்களில் பலர் முன்னணி இடத்துக்கு வந்துள்ளனர். அதுபோல் மைக்கேல் ராஜா வருவார். என்.ஆர்.ரகுநந்தனுடன் 4வது முறையும், கருணாசுடன் முதல்முறையும் சேர்ந்து பணியாற்றியுள்ளேன். இதுபோன்ற ஒரு அழுத்தமான கேரக்டரில் நான் நடித்ததுஇல்லை. சென்னை
ஸ்லாங்கில் டப்பிங் பேசுவதற்கு மிகவும் சிரமப்பட்டேன்’ என்றார்.

The post டப்பிங் பேச முடியாமல் சிரமப்பட்டேன்: விமல் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: