முந்திரி ஓமப்பொடி

என்னென்ன தேவை?

கடலை மாவு - 2 கப்,

பச்சரிசி மாவு - 1/2 கப்,

வெண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்,

ஓமம் - 2 டீஸ்பூன்,

சிகப்பு கார மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்,

உப்பு- தேவைக்கு ஏற்ப,

முந்திரிப் பருப்பு - 10-12,

அலங்கரிக்க முந்திரிப்பருப்பு வறுத்தது - தேவைக்கு ஏற்ப,  

எண்ணெய் - பொரிப்பதற்கு.

எப்படிச் செய்வது?

10-12 முந்திரிப் பருப்பை வெறுமையாக வறுத்து, ஆறியதும் மிக்சியில் விட்டு, விட்டு கரகரப்பாக முதலில் தூள் செய்து கொண்டு, பின் அரிசி மாவுடன் நைசாக அரைத்துக் கொண்டு, இத்துடன் கையில் அழுத்தித் தேய்த்த ஓமம், உப்பு, மிளகாய் தூள், கடலை மாவு, வெண்ணெய் சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து பிசைந்து ஓமப் பொடி அச்சில் போட்டு சூடான எண்ணெயில் பிழிந்து எடுக்கவும். வறுத்த முந்திரிப் பருப்புடன் சேர்த்து பரிமாறவும். இது வித்தியாசமான ஓமப்பொடி.

Related Stories: