கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்

ஐதராபாத்: அக்‌ஷய் குமார், மோகன் பாபு, மோகன்லால், பிரம்மானந்தம் ஆகியோர் அடங்கிய விஷ்ணு மன்ச்சுவின் ‘கண்ணப்பா’ நட்சத்திர குழுவில் தனது அபாரமான திறமையை வெளிப்படுத்தும் முக்கிய கதாபாத்திரன் மூலம் பான் இந்தியா ஸ்டார் பிரபாஸ் இணைந்துள்ளார். நடிகரும், தயாரிப்பாளருமான விஷ்ணு மன்ச்சு, இந்த கதையை மிக ஆழமாகவும், பிரமாண்டமாகவும் வடிவமைப்பதற்காக 7 வருடங்களாக மிக நுணுக்கமாக பணியாற்றியுள்ளார். முகேஷ் குமார் சிங் இயக்கும் ‘கண்ணப்பா’ சிவபெருமானின் பக்திமான் கண்ணப்பாவின் அசைக்க முடியாத பக்திக்கு மரியாதை செலுத்தும் விதமாக உருவாகி வருகிறது.

இது குறித்து விஷ்ணு மன்ச்சு கூறுகையில், ‘என்னுடைய அன்பு நண்பர் பிரபாஸுடன் பல்வேறு மொழிப் பின்னணியில் உள்ள நட்சத்திரங்களை ஒன்றிணைத்து, உண்மையான பான் இந்திய படைப்பாக ‘கண்ணப்பா’-வை உருவாக்கி வருகிறேன். அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பும், அவர் மேற்கொள்ளும் ஒவ்வொரு பாத்திரத்திலும் தன்னை முழுமையாக ஈடுபத்திக் கொள்ளும் திறனும் நான் மிகவும் ரசிக்கும் குணங்களாகும். அவர் படப்பிடிப்பில் இணைந்துள்ளார்’ என்றார். பிரபல ஹாலிவுட் ஒளிப்பதிவாளர் ஷெல்டன் சாவ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு, கெச்சா கம்பக்டீ சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார். நடனக் காட்சிகளை வடிவமைக்கும் பிரபுதேவா என தொழில்நுட்ப குழுவினரும் உலக அளவில் புகழ்பெற்றவர்கள் ஆவர்.

The post கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: