காசு வாங்க போனேன் படம் வாங்கி வந்தேன்: சந்தானம் ‘கலகல’

சென்னை: கோபுரம் பிலிம்ஸ் ஜி.என்.அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் தயாரித்துள்ள படம், ‘இங்க நான்தான் கிங்கு’. சந்தானம், பிரியாலயா, தம்பி ராமய்யா, சேஷூ, மனோபாலா, முனீஷ்காந்த், கூல் சுரேஷ், பாலசரவணன், விவேக் பிரசன்னா, மாறன், சுவாமிநாதன் நடித்துள்ளனர். ஓம் நாராயண் ஒளிப்பதிவு செய்ய, இமான் இசை அமைக்க, எழிச்சூர் அரவிந்தன் கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார். ஆனந்த் நாராயண் இயக்கியுள்ளார்.

விக்னேஷ் சிவன், முத்தமிழ் பாடல்கள் எழுதியுள்ளனர். வரும் 10ம் தேதி திரைக்கு வரும் இப்படம் குறித்து சந்தானம் கூறியதாவது: வீடு வாங்க தயாரிப்பாளர் அன்புசெழியனிடம் காசு கேட்டேன். உடனே அவர், இந்தப் படத்துக்கு அட்வான்ஸ் கொடுத்தார். ‘காசு முக்கியம் இல்லை. படம் பார்ப்பதற்கு தியேட்டருக்கு வருபவர்கள் சிரித்தபடி செல்ல வேண்டும்’ என்றார். தயாரிப்பாளராக இல்லாமல், தியேட்டர் ஓனராக மாறி இப்படத்தை தயாரித்துள்ளார். எனது படத்தின் மூலமாக சுஷ்மிதா தயாரிப்பாளராக மாறியுள்ளார்.

அவருக்கு என் வாழ்த்துகள். இதுவரை என் படத்தில் இல்லாத கலரில், மிக வித்தியாசமான இசையை இமான் வழங்கியுள்ளார். ஆனந்த் நாராயண் அற்புதமாக இயக்கியுள்ளார். தம்பி ராமய்யாவைப் போல் ஒரு அறிவாளியைப் பார்க்க முடியாது. அவருடன் பேசும்போது பிரமிப்பாக இருக் கும். ஹீரோயின் பிரியாலயா நம்ம சேலத்துப் பெண். அவரை பாலிவுட் வரவு என்று நினைத்தேன். அவரும் நன்றாக நடித்துள்ளார். 1990 கிட்ஸ், 2K கிட்ஸ் லைஃப் எப்படி இருக்கும் என்று சொல்லும் இப்படத்தில், எல்லோரும் ரசிக்கும்படியான மேஜிக் நிறைந்திருக்கும்.

The post காசு வாங்க போனேன் படம் வாங்கி வந்தேன்: சந்தானம் ‘கலகல’ appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: