இசைக்கு வயது கிடையாது: வித்யாசாகர்

சென்னை: ஏர் ஃபிளிக் தயாரிப்பில் மீரா மஹதி எழுதி இயக்கியுள்ள படம், ‘டபுள் டக்கர்’. இந்தியாவிலேயே முதல்முறையாக புதுமையாக வடிவமைக்கப்பட்ட 2 அனிமேஷன் கதாபாத்திரங்களுடன் தீரஜ், ஸ்மிருதி வெங்கட், கோவை சரளா, எம்.எஸ்.பாஸ்கர், முனீஷ்காந்த், காளி வெங்கட், சுனில் ரெட்டி, ஷாரா, கருணாகரன், யாஷிகா ஆனந்த், ஜார்ஜ் விஜய், ‘டெடி’ கோகுல் நடித்துள்ளனர். கவுதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்ய, வித்யாசாகர் இசை அமைத்துள்ளார். சந்துரு இணை தயாரிப்பு செய்துள்ளார்.

இப்படத்தின் ஆடியோ விழாவில் ஜெயம் ரவி பேசும்போது, ‘விரைவில் தீரஜ்ஜுடன் இணைந்து நடிப்பேன். மருத்துவராகவும், நடிகராகவும் தீரஜ் நன்கு பணியாற்றி வருகிறார்’ என்றார். வித்யாசாகர் பேசுகையில், ‘தீரஜ்ஜை எனக்கு சிறுவயதில் இருந்தே தெரியும். பிறகு மருததுவராக தெரியும். மீரா மஹதி சொன்ன கதை பிடித்ததால் இசை அமைக்க சம்மதித்தேன்.

கடந்த 34 வருடங் களாக தொடர்ந்து எனக்கு ஆதரவு அளித்து வரும் ரசிகர்களுக்கு நன்றி. இசைக்கு வயது என்பதே கிடையாது, நல்லிசைக்கும், மெல்லிசைக்கும் தமிழ் மக்கள் எப்போதும் ஆதரவு தருவார்கள். ‘டபுள் டக்கர்’ படத்தில் இடம்பெற்றுள்ள 4 பாடல்
களையும் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்’ என்றார்.

The post இசைக்கு வயது கிடையாது: வித்யாசாகர் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: