தேவகோட்டையில் ஸ்ரீ தெய்வானை திருக்கல்யாணம்

தேவகோட்டை: தேவகோட்டை நித்தியகல்யாணிபுரம் ஸ்ரீசவுபாக்ய துர்க்கை அம்மன் கோயிலில் உள்ள ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சக்தி முத்துக்குமாரசுவாமி சன்னிதியில் 26ம் ஆண்டு வைகாசி உற்சவம் நடக்கிறது. ஐந்தாம் திருநாளான நேற்று 23ம் தேதி புதன்கிழமை தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் நடந்தது. விழா ஏற்பாடுகளை பரம்பரை டிரஸ்டிகள் ரமேஷ் சிவாச்சாரியார், நவநீதகிரி குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.

Advertising
Advertising

ரமேஷ் சிவாச்சாரியார் கூறுகையில், ‘பல்வேறு துன்பங்கள் கவலைகளில் இருக்கும் பக்தர்கள் வைகாசி விசாகத்திருவிழா நேரத்தில் முருகனை தரிசித்தால் துயரங்கள் அனைத்தும் நீங்கும். என்பது ஐதீகம். 25ம் தேதியன்று ஸ்ரீ வள்ளித்திருக்கல்யாணம் நடக்கிறது. 27ம் தேதியன்று தேரோட்டம் நடக்கிறது. 28ம் தேதியன்று பால்குடம் நடக்கிறது. அனைத்திலும் பக்தர்கள் திரளாக கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்’ என்றார்.

Related Stories: