அயலான் படத்தில் இணைந்த சித்தார்த்

சென்னை: ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘அயலான்’. கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கிய இப்படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். ரகுல் பிரீத் சிங், ஷரத் கேல்கர், இஷா கோபிகர், பானுப்ரியா, யோகி பாபு, கருணாகரன், பால சரவணன் ஆகியோர் இதில் நடித்துள்ளனர். இந்த படத்தில் ஏலியன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளது. இது தொடர்பான கிராபிக்ஸ் பணிகளுக்காகவே இப்படம் தாமதமாகி வந்தது. தற்போது பட வேலைகள் முடியும் நிலையில் உள்ளது. டப்பிங் பணிகள் விரைவில் தொடங்குகிறது. ஏலியன் கேரக்டருக்கு டப்பிங் பேச சித்தார்த் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் விஜய் சேதுபதி டப்பிங் பேசியிருந்தார். இப்போது சித்தார்த் அவரது படத்துக்கு டப்பிங் பேசுவது குறிப்பிடத்தக்கது.

The post அயலான் படத்தில் இணைந்த சித்தார்த் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: