சென்னை: ரஜினியும் கமலும் ஆரம்ப காலங்களில் இணைந்து நடித்தபோது தினமும் படப்பிடிப்பு தளங்களில் சந்தித்து உரையாடுவார்கள். இருவரும் தனித்தனியாக நடிக்க தொடங்கிய பிறகு அருகருகே படப்பிடிப்பு நடந்தால் சந்தித்து உரையாடுவார்கள். இது எப்போதாவது நடக்கும். கடைசியாக ரஜினி நடித்த ‘பாபா’ படத்தின் படப்பிடிப்பும், கமல் நடித்த ‘பஞ்சதந்திரம்’ படத்தின் படப்பிடிப்பும் ஒரே இடத்தில் நடந்தபோது சந்தித்து பேசினார்கள். அதன்பிறகு அப்படி ஒரு வாய்ப்பு அமையவில்லை. பொது விழாக்கள், தனிப்பட்ட முறையில் வீட்டில் சந்தித்து வந்தனர். இந்த நிலையில் 21 வருடங்களுக்கு பிறகு இருவரும் படப்பிடிப்பில் நேற்று சந்தித்து பேசினார்கள்.
கமல்ஹாசன் தற்போது ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார். இதனை ஷங்கர் இயக்குகிறார். ரஜினியின் 170வது படத்தை த.செ.ஞானவேல் இயக்கி வருகிறார். இரு படத்தையும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இரண்டு படத்தின் படப்பிடிப்புகள் சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் அருகருகே அரங்கம் அமைக்கப்பட்டு நடந்து வருகிறது. கமலின் படப்பிடிப்பு அருகே நடப்பதை அறிந்த ரஜினி கமலை சந்திக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். இந்த தகவல் கமலுக்கு சொல்லப்பட்டதும், ‘என் நண்பனை சந்திக்க நானே வருகிறேன்’ என்று கமல்ஹாசன் ரஜினியின் படப்பிடிப்பு அரங்கத்திற்கு சென்று சந்தித்தார். இருவரும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.
The post படப்பிடிப்பில் ரஜினி, கமல் திடீர் சந்திப்பு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.
