அமிதாப்பச்சனின் 81வது பிறந்த நாள்: நாடு முழுவதும் ரசிகர்கள் கொண்டாட்டம்

 

மும்பை: இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனின் 81வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. நாடு முழுவதும் ரசிகர்கள் இதை உற்சாகமாக கொண்டாடினர். 1970களில் ஆங்ரி யங்மேன் என்ற அடைமொழியுடன் தொடர்ந்து ஆக்‌ஷன் ஹீரோவாக நடித்து புகழ் பெற்றவர் அமிதாப் பச்சன். அதுவரை ராஜேஷ் கன்னாவிடம் இருந்த சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை அவரிடமிருந்து அமிதாப் கைப்பற்றிய தருணம் அது. அதன் பிறகு 90களின் இறுதி வரையும் ஹீரோவாக நடித்து வலம் வந்தார்.

2000ம் ஆண்டுக்கு பிறகு தனது வயதுக்கு ஏற்ப வித்தியாசமான வேடங்களை அமிதாப் தேர்வு செய்தார். அதுவே அவரது தொடர் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. இந்நிலையில் நேற்று அவருக்கு 81 வயது பிறந்தது. நேற்றுமுன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு அவரது பங்களாவுக்கு வெளியே ரசிகர்கள் கூடிவிட்டனர். உடனே வெளியே வந்த அமிதாப் பச்சன், ரசிகர்களை சந்தித்து கையசைத்தார். பிறகு நேற்று காலையும் அவர் வீடு முன் திரண்ட ரசிகர்களை சந்தித்தார்.
இந்நிலையில் மும்பை, டெல்லி, கொல்கத்தா, உ.பி, பீகார், ஒடிசா உள்பட பல்வேறு மாநிலங்களிலும் அமிதாப் பச்சன் பெயரில் ரசிகர்கள் கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்தனர். மும்பையில் பல்வேறு இடங்களில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி அமிதாப் பிறந்த நாளை ரசிகர்கள் கொண்டாடினர்.

The post அமிதாப்பச்சனின் 81வது பிறந்த நாள்: நாடு முழுவதும் ரசிகர்கள் கொண்டாட்டம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: