அமிதாப் பச்சன், பிளிப்கார்ட் மீது புகார்: நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தில்

மும்பை: பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் பிளிப்கார்ட் ஆன்லைன் நிறுவனம் மீது மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தில் (சிசிபிஏ) அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (சிஏஐடி) புகார் அளித்துள்ளது. அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு, அமிதாப் பச்சன், இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட் இணைந்து உருவாக்கிய ஒரு விளம்பரத்துக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டது. அதில், விளம்பரத்தில் மொபைல்களின் தரம், விற்பனைக்காக அமிதாப் பச்சன் பேசி நடிக்கிறார். அப்போது, இந்த மொபைல் போன்கள் உங்களுக்கு கடைகளில் கிடைக்காது என்கிறார். சர்ச்சைக்குரிய இதுபோன்ற வசனத்தை வர்த்த கர்களின் கூட்டமைப்பு கடுமையாக எதிர்த்து உள்ளது. இந்த தவறான சித்தரிப்பு உள்ளூர் சிறிய கடைகளை கடுமையாக பாதிக்கிறது. ஏற்கனவே ஆன்லைன் வர்த்தகத்தால் சிறு தொழில்கள் பாதித்துள்ள நிலையில் அமிதாப் பச்சன் இதுபோன்ற விளம்பரத்தில் நடிப்பதால், எங்களுக்கு மேலும் நஷ்டம் ஏற்படும். இந்த விளம்பரத்தை தடை செய்ய வேண்டும். அமிதாப் பச்சன் மற்றும் பிளிப்கார்ட் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது. இந்நிலையில் அமிதாப் பச்சன் கூறுகையில், ‘சிறு வியாபாரிகளை காயப்படுத்தும் எண்ணம் துளியளவும் எனக்கு இல்லை. இதற்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறி
பதிவு வெளியிட்டுள்ளார்.

 

The post அமிதாப் பச்சன், பிளிப்கார்ட் மீது புகார்: நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தில் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: