பொலிடிக்கல் திரில்லர் ரத்தம்: விஜய் ஆண்டனி தகவல்

சென்னை: விஜய் ஆண்டனி, மகிமா நம்பியார், ரம்யா நம்பீசன், நந்திதா ஸ்வேதா, நிழல்கள் ரவி நடித்துள்ள படம், ‘ரத்தம்’. இன்பினிட்டி பிலிம் வென்ச்சர்ஸ் சார்பில் கமல் போரா, ஜி.தனஞ்செயன், பி.பிரதீப், பங்கஜ் போரா தயாரித்துள்ளனர். ‘தமிழ்ப் படம்’, ‘தமிழ்ப் படம் 2’ ஆகிய படங்களை தொடர்ந்து சி.எஸ்.அமுதன் இயக்கியுள்ளார். வரும் 28ம் தேதி திரைக்கு வரும் என்று கூறப்பட்ட இப்படம், தற்போது வரும் அக்டோபர் 6ம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்ய, கண்ணன் நாராயணன் இசை அமைத்துள்ளார். படம் குறித்து விஜய் ஆண்டனி கூறியதாவது:

நானும், இயக்குனர் சி.எஸ்.அமுதனும் கல்லூரியில் ஒன்றாகப் படித்த நெருங்கிய நண்பர்கள். ‘நான்’ படத்தை முடித்த பிறகு அவரது இயக்கத்தில் நான் நடித்திருக்க வேண்டும். இத்தனை வருடங்களாக அந்த வாய்ப்பு நழுவி, இப்போது ‘ரத்தம்’ என்ற பொலிடிக்கல் திரில்லர் மூலம் இணைந்துள்ளோம். ஏற்றத்தாழ்வு குறித்து உருவான ‘ஒரு நாள்’ பாடலை தெருக்குரல் அறிவு எழுதி பாடியுள்ளார். எனக்கு ஜோடி நந்திதா ஸ்வேதா. பத்திரிகை மற்றும் ஊடகப் பின்னணியில் நடக்கும் கதை என்பதால், அதன் உண்மைத்தன்மை மாறாமல் படமாக்கியுள்ளோம். கொலையாளி யார் என்று தொடக்கத்திலேயே சொல்லிவிட்டு, அதன் பின்னணி மற்றும் அது பற்றி விசாரிக்கும்போது நடக்கும் திடுக்கிடும் திருப்பங்கள் பற்றி சொல்கிறோம். சமூக வன்மங்களையும், சம்பந்தமே இல்லாதவர்களின் குரூரங்களையும் பற்றி சொல்லும் இப்படத்துக்கு ‘வன்மம்’ என்ற பெயர் பரிசீலனை செய்யப்பட்டு, பிறகு ‘ரத்தம்’ என்று மாற்றபட்டது. இதில் நான் பத்திரிகை எடிட்டர் கேரக்டரில் நடித்துள்ளேன். தெலுங்கில் ‘தோஷி’ என்ற பெயரில் இப்படம் டப்பிங் செய்யப்படுகிறது.

The post பொலிடிக்கல் திரில்லர் ரத்தம்: விஜய் ஆண்டனி தகவல் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: