இப்பாடலில் சிகரெட் மற்றும் மதுவை ஊக்குவிக்கும் வகையில் வரிகள் இடம்பெற்றுள்ளதாக கூறி பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. சிலர் போலீசிலும் புகார் செய்தனர். இந்நிலையில், ‘நான் ரெடி’ பாடலில் இடம்பெற்றுள்ள சில வரிகளை தணிக்கை குழு நீக்கியுள்ளது. பாடலில் இடம்பெற்ற ‘பத்தாது பாட்டில் நான் குடிக்க. அண்டாவ கொண்டா சியர்ஸ் அடிக்க’ என்ற வரியும், ‘மில்லி உள்ள போனா, கில்லி வெளில வருவான்டா’ என்ற வரியும் நீக்கப்பட்டுள்ளது. இணையதளங்களில் வெளியான தணிக்கை சான்றிதழ் குறிப்பில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இப்பாடலில் விஜய் புகைப்பிடிப்பது போன்ற குளோசப் காட்சிகளும் நீக்கப்பட்டுள்ளதாக அக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த நீக்கம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும்போது மட்டுமா அல்லது திரையரங்குகளிலும் இது பொருந்துமா என்பது பற்றி தெரிவிக்கப்படவில்லை. இதுகுறித்து படக்குழுவினர் கூறும்போது, ‘பாடலை யூடியூப்பில் வெளியிட்ட பின்பு அந்த வரிகள் இடம்பெறும்போதும், புகைப்பிடிக்கும் காட்சி இடம்பெறும்போதும் உரிய எச்சரிக்கை வாசகத்துடன்தான் வெளியிட்டுள்ளோம். திரையரங்குகளில் வெளியாகும்போதும் இந்த எச்சரிக்கை வாசகம் இடம்பெறும்’ என்றனர்.
The post விஜய்யின் ‘லியோ’ பாடல் வரிகள் நீக்கம் தணிக்கை குழு திடீர் நடவடிக்கை appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.
