தென்னிந்திய நடிகர் சங்கம் ரூ.40 கோடி கடன் வாங்க முடிவு: பொதுக்குழுவில் அறிவிப்பு

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67வது பொதுக்குழு கூட்டம் நேற்று சென்னையில் நடந்தது. சங்க தலைவர் நாசர் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணை தலைவர் பூச்சி எஸ்.முருகன் முன்னிலை வகித்தனர். 2022-23 ஆண்டறிக்கையை கோவை சரளா வாசித்தார். கடந்த கால நிர்வாக செயல்பாடுகள், புதிய கட்டிடம் கட்ட வங்கி கடன், நட்சத்திரங்களிடம் நிதி திரட்டுதல், நடத்திர கலைநிகழ்ச்சிகள் நடத்துதல் மற்றும் எதிர்கால திட்டங்களை விளக்கி விஷால் ஒப்புதல் பெற்றார். நடிகர் சங்க செயல்பாடுகள், எதிர்கால திட்டங்கள் குறித்து நாசர் உரையாற்றினார். பொதுக்குழு முடிந்த பிறகு நாசர், பூச்சி எஸ்.முருகன், விஷால், கார்த்தி ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது: நாங்கள் தேர்தலில் போட்டியிட்ட போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம்.

நடிகர் சங்க புது கட்டிடம் மட்டுமே பாக்கி. 5 மாதங்கள் அவகாசம் கொடுத்திருந்தால் கட்டி முடித்திருப்போம். பிறகு நடந்த தேர்தல், அதையொட்டி ஏற்பட்ட பிரச்னை, இடையில் ஏற்பட்ட கொரோனா ஆகியவற்றால் பணி தடைபட்டது. தற்போது கட்டிடத்தை முடிக்க சங்கத்தில் நிதி இல்லை என்ப தால், ரூ.40 கோடி வரை வங்கி கடன் பெற பொதுக்குழுவில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. முதலில் ரூ.30 கோடி வாங்குகிறோம். முன்னணி நடிகர், நடிகைகளிடம் நிதி திரட்டு கிறோம். தவிர, வங்கி கடனை திருப்பிச் செலுத்தும் திட்டத்தையும் வகுத்துள்ளோம். அதற்காக நட்சத்திர கலைநிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளோம். சங்க உறுப்பினர்களுக்கு மருத்துவ உதவி உள்பட அவசர கால உதவிகள் வழங்க நிதி இல்லை. நடிகர்கள் தனிப்பட்ட முறையில் உதவி செய்கிறோம். நடிகர் சங்க கட்டிடம் அடுத்த ஆண்டுக்குள் முடிந்து, அடுத்த ெபாதுக்குழு புதிய கட்டிடத்தில் நடக்கும்.

 

The post தென்னிந்திய நடிகர் சங்கம் ரூ.40 கோடி கடன் வாங்க முடிவு: பொதுக்குழுவில் அறிவிப்பு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: