ஷாருக்கான் படத்தில் மீண்டும் லுங்கி டான்ஸ்

மும்பை: ஷாருக்கானுக்கும், லுங்கிக்கும் இடையிலான தொடர்பு ரசிகர்களுக்கு ஏற்கனவே பரிச்சயமானதுதான். அவரும், தீபிகா படுகோனும் நடித்து வெளியான ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ என்ற படத்தில் இடம்பெற்ற பாடல் காட்சியில், ஷாருக் கான் லுங்கி டான்ஸ் ஆடியிருந்தார். இப்போது அவர் நடித்துள்ள ‘ஜவான்’ படத்திலும் லுங்கி டான்ஸ் இடம்பெற்றுள்ளது. அனிருத் இசையில் உருவான ‘வந்த எடம்’ என்ற பாடல் காட்சியில் ஷாருக்கான் மீண்டும் லுங்கியுடன் இணைந்துள்ளார். அவருடன் சேர்ந்து ஆயிரக்கணக்கான பின்னணி நடனக் கலைஞர்கள் லுங்கி அணிந்து, தனித்துவமான கலாசார உணர்வுடன் தங்கள் நடனத்தையும், நடிப்பையும் வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தில் இடம்பெற்ற ‘1234 கெட் ஆன் தி டான்ஸ் ப்ளோர்’ பாடலுக்குப் பிறகு ஷாருக்கானும், பிரியாமணியும் மீண்டும் ‘ஜவான்’ படத்தில் இணைந்து ஆடியுள்ளனர். ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மெண்ட் சார்பில் கவுரி கான், கவுரவ் சர்மா இணைந்து தயாரித்துள்ளனர். அட்லி இயக்கியுள்ளார். விஜய் சேதுபதி, நயன் தாரா, யோகி பாபு நடித்து இருக்கின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வரும் செப்டம்பர் 7ம் தேதி படம் திரைக்கு வருகிறது.

The post ஷாருக்கான் படத்தில் மீண்டும் லுங்கி டான்ஸ் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: