ரசிகர்களுக்கு சுஷ்மிதா சென் அறிவுரை

மும்பை: பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சுஷ்மிதா சென். 1996ல் வெளியான தஸ்தக் படத்தில் அறிமுகமான அவர், 25 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வருகிறார். சமீபத்தில் தனக்கு மாரடைப்பு ஏற்பட்டு ஆஞ்சியோ பிளாஷ்டிக் மற்றும் ஸ்டெண்ட் பொருத்தப்பட்டதாக சுஷ்மிதா தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் மாரடைப்பில் இருந்து மீண்டது குறித்து சுஷ்மிதா சென் கூறுகையில்; “மாரடைப்பு பாதிப்பு ஏற்பட்ட அந்த நாட்கள் எனது வாழ்க்கையில் கடினமான கட்டமாக இருந்தது. அந்த கஷ்டத்தில் இருந்து இப்போது கடந்து வந்து விட்டேன். அதில் இருந்து மீண்டு வாழ்வின் மறு பக்கத்துக்கு வந்து இருப்பதை அதிர்ஷ்டமாக கருதுகிறேன். இனிமேல் கவனமாக இருப்பேன். எல்லோரும் தங்களின் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்ள வேண்டும்” என கூறினார்.

 

 

The post ரசிகர்களுக்கு சுஷ்மிதா சென் அறிவுரை appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: