முதல் படம் வெளியாகி 30வது ஆண்டு ஷங்கருக்கு விழா நடத்திய உதவி இயக்குனர்கள்

சென்னை: ஷங்கர் இயக்கத்தில் உருவான முதல் படம் ‘ஜென்டில்மேன்’. கடந்த 1993ம் ஆண்டு ஜூலை 30ம் தேதி இப்படம் ரிலீஸ் ஆனது. ‘ஜென்டில்மேன்’ படத்தின் 30ம் ஆண்டையும் தமிழ் சினிமாவில் ஷங்கரின் 30வது வருடத்தையும் கொண்டாட அவரது உதவி இயக்குனர்கள் முடிவு செய்தனர். இப்போது கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன்-2 படத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். இந்த படத்தை இயக்கியபடி, ராம்சரண் நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’ படத்தையும் அவர் இயக்குகிறார். இந்த இரண்டு படங்களில் பணிபுரியும் ஷங்கரின் உதவி இயக்குனர்கள், சென்னையில் ஒரு விழா நடத்தினர். இதில் கலந்துகொண்டு ஷங்கர் கேக் வெட்டினார். அவருக்கு உதவி இயக்குனர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிகழ்ச்சிக்கான புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகியுள்ளன. ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், விக்ரம் உள்பட முன்னணி ஹீரோக்களுடன் பணியாற்றியுள்ள ஷங்கர், இந்த ஆண்டு கேம் சேஞ்சர் படத்தையும் அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்தியன் 2 படத்தையும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்.

The post முதல் படம் வெளியாகி 30வது ஆண்டு ஷங்கருக்கு விழா நடத்திய உதவி இயக்குனர்கள் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: