விமானத்தில் நடிகையிடம் போதை இளைஞர்கள் சீண்டல்

மும்பை: விமானத்தில் சென்ற நடிகை உர்ஃபி ஜாவேத்திடம், போதை இளைஞர்கள் சிலர் அநாகரிகமாக நடந்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையிலிருந்து கோவாவுக்கு, கடந்த சில நாட்களுக்கு முன் ஆபாச ஆடைகளை அணிந்து போஸ் கொடுக்கும் நடிகை உர்ஃபி ஜாவேத் சென்றார். முன்னதாக அவர் விமான நிலைய நுழைவாயிலில் நின்றிருந்த புகைப்படக்காரர்களுக்கு விதவிதமானபோஸ் கொடுத்தார். விமானத்தை அவர் அடைந்ததும், அவரை அடையாளம் கண்ட இளைஞர்கள் கூச்சலிட்டனர். எகானமி வகுப்பில் பயணம் செய்த போது, இளைஞர்கள் சிலர் அவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டனர்.

இன்னும் சிலர், அநாகரிகமான கருத்துகளை கூறி விமர்சித்தனர். இதுகுறித்து உர்ஃபி ஜாவேத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், ‘மும்பையிலிருந்து கோவாவுக்கு விமானத்தில் சென்றபோது, குடிபோதையில் இருந்த சில இளைஞர்களால் துன்புறுத்தலை எதிர்கொண்டேன். என்னை அவர்கள் அவமானப்படுத்தி பேசினார்கள். குடிபோதையில் இருப்பதால், பெண்களிடம் அவர்கள் தவறாக நடந்துகொள்ளலாமா? என்னை பொறுத்தவரை நான் சமூகத்தில் பொதுவானவள். அதற்கான நான் பொது சொத்து அல்ல’ என்று குறிப்பிட்டுள்ளார்.

The post விமானத்தில் நடிகையிடம் போதை இளைஞர்கள் சீண்டல் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: