எப்படி இருக்கு கங்குவா க்ளிம்ப்ஸ்? ரசிகர்கள் ஆர்வம்

சூர்யாவின் 42 வது படமாக உருவாகும் கங்குவா படத்தின் க்ளிம்ஸ் இன்று இரவு 12 மணிக்கு வெளியாக உள்ளது. ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். ஹிந்தி நடிகை திஷா பதானி சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். கிளிம்ஸ் திரையிடலின் போது சிறுத்தை சிவா மேலும் சில சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது , இந்த படம் 1500 ஆண்டுகளுக்கு முன்பு நடக்கும் கற்பனையான கதைக்களம் கொண்ட படம்.‘கங்குவா’ எனும் பட தலைப்பிற்கு அர்த்தம் நெருப்பாய் இருக்கும் ஒரு கதாபாத்திரம் என்பது பொருள். இது என் கனவு திரைப்படம். பெரும் பொருட் செலவில் அதிக சி. ஜி காட்சிகள் இடம் பெற்றுள்ளது. 3டி வடிவில் இந்த படத்தை உருவாக்கி வருகிறோம் என்றார். மேலும் படம் 10 மொழிகளில் வெளியாக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார் அதில் ஆங்கிலமும் ஒன்று என்பது சிறப்புத் தகவல்.

எப்படி இருக்கிறது கங்குவா க்ளிம்ஸ்?

‘ தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் பிரத்தியேகமாக திரையிடப்பட்ட இந்த க்ளிம்ஸ் ஹாலிவுட் தரத்திற்கு’ அப்போகலிப்ஸ்’ , 300 படங்களை நினைவு கூறுவது போல் உருவாக்கப்பட்டுள்ளது.

சூர்யாவின் தோற்றமும் அவருடைய வசனங்களும் கூட முற்றிலுமாக அவரின் முந்தைய படங்களில் இருந்து வித்யாசப்பட்டு , அதீத மெனக்கெடலுடன் இந்த படத்தில் நடித்திருக்கிறார் என்பது தெரிகிறது. சூர்யாவின் பிறந்தநாள் சிறப்பாக வெளியாகவிருக்கும் ‘கங்குவா’ க்ளிம்ஸ் வீடியோவிற்காக இப்போதே ரசிகர்கள் ஆர்வம் காட்டத் துவங்கியுள்ளனர்.

The post எப்படி இருக்கு கங்குவா க்ளிம்ப்ஸ்? ரசிகர்கள் ஆர்வம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: