ஹீரோயினாகும் தேவதர்ஷினி மகள்

திரைப்படங்களில் காமெடி கேரக்டர்களில் நடித்து வருபவர், தேவதர்ஷினி. டி.வி ெதாடர்களிலும் நடித்து வருகிறார். நடிகர் சேத்தனைக் காதலித்து திருமணம் செய்துள்ளார். இத்தம்பதிக்கு நியதி என்ற மகள் இருக்கிறார். விஜய் சேதுபதி, திரிஷா ேஜாடி சேர்ந்த ‘96’ என்ற படத்தில் நடித்த அவர், அப்படத்துக்குப் பிறகு நடிப்பை விட்டு ஒதுங்கினார்.

காரணம், படிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்ததுதான். அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த ‘பிகில்’ படத்தில் வாய்ப்பு கிடைத்தும் நடிக்கவில்லை. இந்நிலையில், மலையாளத்தில் ‘ராணி’ என்ற படத்தில் நடித்து வரும் நியதி, அடுத்து தமிழ்ப்படம் ஒன்றில் ஹீரோயினாக நடிக்கிறார். அதற்காக நியதி போட்டோஷூட் நடத்தி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

The post ஹீரோயினாகும் தேவதர்ஷினி மகள் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: