ராணுவ ரகசியங்கள் குறிப்பாக கடற்படையின் நடமாட்டம் தொடர்பான தகவல்களை பாகிஸ்தானுக்கு விஷால் யாதவ் விற்றது உறுதியானது.
ஆபரேஷன் சிந்தூரின்போது, விஷால் பல முக்கிய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், விஷால் யாதவ் ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையானவர் என்பதும், இதனால், அவர் கடுமையான கடன் சுமையில் இருப்பதும் தெரியவந்தது. கடனை திருப்பி அடைப்பதற்காக அவர் சமூக வலைதளத்தில் தனக்கு அறிமுகமான பெண்ணிடம் ராணுவ ரகசியங்களை விற்று பணம் பெற்றுள்ளார். அவரது வங்கிக் கணக்குக்கு பணம் வந்ததற்கான ஆதாரங்களும் சிக்கின. மேலும் கிரிப்டோ கரன்சி மூலமும் அவர் பாகிஸ்தானிடம் இருந்து பணம் பெற்றுள்ளார். இதையடுத்து, விஷால் யாதவை கைது செய்த ராஜஸ்தான் சிஐடி போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post ஆபரேஷன் சிந்தூரின் போது ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு விற்ற கடற்படை ஊழியர் கைது: ஆன்லைன் சூதாட்டத்தில் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட தகவல்களை பரிமாறியது கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.
