இதையடுத்து முல்லைப் பெரியாறு அணக்கு எதிரான பிரசாரங்களும் எம்புரான் திரைப்படத்தில் மறைமுகமாக இடம் பெற்றிருப்பது தமிழ்நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் எம்புரான் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும்; தமிழ்நாட்டில் எம்புரான் படத்தை தடை செய்ய வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்பி உள்ளிட்டோர் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், எம்புரான் படத்துக்கு எதிராக தமிழ்நாடு விவசாயிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இந்நிலையில், வகுப்புவாதம், பாசிசத்துக்கு எதிரானது எம்புரான் படம் என காங். உறுப்பினர் ஜெபி மதர் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் இது தொடர்பாக ஜெபி மதர் பேசியதாவது; இந்திய கலாச்சாரம், இலக்கியம், திரைப்படங்களை ஊக்குவிக்க வேண்டும் என மாநிலங்களவையில் ஜெபி மதர் வலியுறுத்தியுள்ளார். 2019ல் வெளியான மலையாள திரைப்படம் லூசிஃபர் ஒரு அரசியல் படம், அது மிகப்பெரும் வெற்றி பெற்றது. லூசிஃபர் திரைப்படத்தின் தொடர்ச்சியாக எம்புரான் திரைப்படம் வெளியாகி உள்ளது; அது சிறந்த கலைப்படைப்பாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
The post வகுப்புவாதம், பாசிசத்துக்கு எதிரானது எம்புரான் படம்: மாநிலங்களவையில் காங். உறுப்பினர் ஜெபி மதர் பேச்சு! appeared first on Dinakaran.