அலிகர்: உத்தரப்பிரதேசத்தின் அலிகர் பகுதியில் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் முகமது ரஹீஸ் என்பவர் சிறிய அளவில் ஜூஸ் கடை நடத்தி வருகின்றார். இந்நிலையில் கடந்த 18ம் தேதி அவருக்கு ரூ.7.79கோடி வருமான வரி செலுத்த வேண்டும் என்று நோட்டீஸ் வந்தது. இதனை பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார். இதற்கு எவ்வாறு பதில் அளிக்க வேண்டும் என்பது அவருக்கு தெரியவில்லை. இது தொடர்பாக அவர் வழக்கறிஞரை சந்தித்துள்ளார். அவர் அவரது வங்கி கணக்கின் பரிவர்த்தனை குறித்த விவரங்களை கேட்டுள்ளதாக தெரிகிறது. இது குறித்து ரபீஸ் கூறுகையில், ஒரு நாளைக்கு எனக்கு ரூ.400 மட்டுமே வருமானம் கிடைக்கிறது. இதில் எனது வயதான மற்றும் நோய்வாய்ப்பட்ட பெற்றோர் மற்றும் எனது குடும்பத்தையும் கவனித்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். இந்த நோட்டீஸ் எனக்கு கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. இந்த நெருக்கடியை எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை” என்றார்.
The post உ.பி.யில் ஜூஸ் கடைக்காரருக்கு ரூ.7.79 கோடி வருமான வரி நோட்டீஸ் appeared first on Dinakaran.