புதுடெல்லி: டெல்லியில் கடந்த 2020ம் ஆண்டு குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்து 53 பேர் பலியாகினர். இந்த போராட்டத்திற்கு தலைமை ஏற்று நடத்திய ஜேஎன்யு பல்கலைக்கழக முன்னாள் மாணவர் தலைவர் உமர் காலித் உள்ளிட்டோர் சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 5 ஆண்டாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தனது தங்கையின் திருமணத்தில் பங்கேற்பதற்காக காலித்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் வரும் 16ம் தேதி முதல் 29ம் தேதி வரை இடைக்கால நிபந்தனை ஜாமீன் வழங்கி உள்ளது.
