மும்பை: புதிய விமானி மற்றும் பணியாளர்கள் பணி நேர விதிமுறைகளை அமல்படுத்துவது தொடர்பான திட்டமிடல் குறைபாடுகளால் இண்டிகோ நிறுவனத்தின் சேவையில் மிகப்பெரிய அளவிலான இடையூறுகள் ஏற்பட்டது. நெருக்கடியில் சிக்கியுள்ள இண்டிகோ நேற்று பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து 60 விமானங்களை ரத்து செய்தது. 32 விமானங்களின் வருகை மற்றும் 28 விமானங்களின் புறப்பாடு ரத்து செய்யப்பட்டது. இதனிடையே இண்டிகோவின் சமீபத்திய செயல்பாடு இடையூறுகள் குறித்த தரவுகள் மற்றும் புதுப்பிப்புகள் உள்ளிட்டவை குறித்து விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு இண்டிகோ தலைமை செயல் அதிகாரி பீட்டர் எல்பர்ஸ்க்கு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அறிவுறுத்தி உள்ளது.
ரூ.10,000 இழப்பீடு: இதற்கிடையே விசாரணை கடுமையாவதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு தலா ரூ.10,000 இழப்பீடு வழங்குவதற்காக இண்டிகோ நிறுவனம் நேற்று அறிவித்துள்ளது. கடந்த 3 முதல் 5ம் தேதி வரை விமான ரத்தால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை வவுச்சர் தரப்படும் என அறிவித்துள்ளது.
