அவர்களுக்கு இன்னும் 100 நாள் வேலை திட்டத்தில் பணம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. தமிழ்நாடு முழுவதும் இதேநிலைதான் இருக்கிறது. தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் போன்ற மாவட்டங்களில் அடிப்படையான பணிகளை செய்யத் தேவையான ஜல்லி மற்றும் எம்-சாண்ட் புதுக்கோட்டை அல்லது கரூரிலிருந்துதான் வர வேண்டும். ஆனால், இன்றைக்கு கலைஞர் வீடு கட்டும் திட்டமாக இருந்தாலும், சாலை வசதிகளாக இருந்தாலும் சரி, கடந்த 2 மாதங்களாக அது நின்றுபோய் இருக்கிறது. அதற்கு காரணம், ரூ.2,000க்கு ஒரு யூனிட் கொடுத்தவர்கள், உடனடியாக அதை இரு மடங்காக உயர்த்தி விட்டார்கள்.
அமைச்சர் எ.வ.வேலு: எல்லா மாவட்டங்களிலும் இந்தப் பிரச்னை இல்லை. ஒரு குறிப்பிட்ட மாவட்டங்களில் கிரஷர் முதலாளிகள் ஒரு கூட்டமைப்பு ஏற்படுத்தி கொண்டு, இதுபோன்று விலைகளை ஏற்றியுள்ளனர். இது அரசுக்குத் தெரிந்த உடனே முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்று முதல்வர், தலைமை செயலாளரை அழைத்து, நேரடியாக அந்த கலெக்டரிடத்தில் கடந்த வாரம் பேசப்பட்டிருக்கிறது. இப்படி விலைகளை ஏற்றுவார்களேயானால் அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்.
The post கிரஷர் உரிமையாளர்கள் தன்னிச்சையாக ஜல்லி மற்றும் எம்-சாண்ட் விலையை உயர்த்தினால் கடும் நடவடிக்கை: அமைச்சர் எ.வ.வேலு எச்சரிக்கை appeared first on Dinakaran.