பெண்கள்தான் 2026ம் ஆண்டு திமுக ஆட்சியை தூக்கி பிடிப்பார்கள். இன்று தமிழ்நாடு முதல்வர் எங்கு போனாலும் வரவேற்கக் கூடிய கூட்டம் என்றால் அதில் 80 சதவீதம் பெண்களாகத்தான் உள்ளனர். சக்திமயமான இந்த ஆட்சியை எந்த சக்தியாலும் அகற்ற முடியாது. விஜய் தவழுகின்ற குழந்தை, நாங்கள் பி.டி.உஷா போன்று பல்வேறு ஓட்டப்பந்தய போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்றவர்கள். பல கரடுமுரடான பாதைகளை கடந்து வந்தவர்கள். சிறை என்றால் என்னவென்று தெரியாதவர்களுக்கு, போராட்டம் என்றால் என்னவென்று தெரியாது அவர்களுக்கு, ஆர்ப்பாட்டக் களம் என்றால் என்னவென்று தெரியாது அவர்களுக்கு, பொதுக்கூட்டம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள், மக்கள் பணி என்றால் என்னவென்று தெரியாதவர்கள், புயல் மழை வெள்ளம் போன்றவற்றில் கூட தன்னுடைய இருப்பிடத்திற்கு அழைத்து வந்து 10 பேருக்கு உதவி செய்து அதை போட்டோ எடுத்து பிரசுரம் செய்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
The post நாங்கள் பி.டி.உஷா போல் வென்றவர்கள் விஜய் தவழும் குழந்தை: அமைச்சர் சேகர்பாபு பதிலடி appeared first on Dinakaran.